×

மகனை இழந்த பிரகாஷ்ராஜின் வலி

தனது 5 வயது மகன் இழப்பு குறித்து பிரகாஷ்ராஜ் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசியிருக்கும் அவர், `வலி என்பது ரொம்ப பெர்சனலானது. எனது தோழி கவுரி லங்கேஷும், எனது மகன் சித்தார்த்தும்தான் என் வலி. எனினும், என்னால் சுயநலமாக இருக்க முடியாது. எனக்கு மகள்கள் இருக்கின்றனர். எனக்கு குடும்பம் இருக்கிறது, தொழில் இருக்கிறது, மக்கள் இருக்கின்றனர். ஒரு மனிதனாக எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதற்கும் நான்தான் பொறுப்பு.

எனவே, வலியைவிட எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். ஏனெனில், அது தனிப்பட்ட வலியை குறைக்கிறது. அதேவேளையில், நான் அதை மறைக்க விரும்பவில்லை. சில காயங்கள் சதையை விட ஆழமானவை. அதனுடன் நீங்கள் வாழ வேண்டும். நான் ஒரு மனிதன். அது என்னை தொந்தரவு செய்கிறது, காயப்படுத்துகிறது. எனினும், வாழ்வதற்கான காரணங்களை கண்டுபிடிப்போம். மரணம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது’ என்று கூறியுள்ளார். திடீர், திடீரென்று அவர் தத்துவார்த்தமாக பேசுவது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags : Prakashraj ,Gauri Lankesh ,Siddharth ,
× RELATED எல்லாரும் திட்டுவாங்க.. பழகிடும் - Karthi Speech at Miss You Trailer Launch | Siddharth