தீய எண்ணங்கள் தொலைய, நலன்கள் பெருக வைக்கும் சுவாமிநாத ஸ்வாமி ஸ்லோகம்

காஷாய ஸம்வீத காத்ரம் - காம

ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷான்ன பாத்ரம்

காருண்ய ஸம்பூர்ண நேத்ரம் - ஸக்தி

ஹஸ்தம் பவித்ரம் பஜே ஸம்பு புத்ரம் -

சுவாமிமலை சுவாமிநாத ஸ்தோத்திரம்.

பொதுப் பொருள்: பற்றற்ற முனிவரை போல காஷாய வஸ்திரத்தினால் அலங்கரிக்கப்பட்டவரே, காமம், மோகம் போன்ற தீய எண்ணங்களை பக்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள பிட்சைப் பாத்திரம் ஏந்தியிருப்பவரே, கருணை பொழியும் கண்களை உடையவரே, வேலைக் கையில் பற்றியவரே, பக்தர்களை பரிசுத்தமாக்குபவரே, ஈசனுக்கே ஞானம் விளக்கிய சுவாமிநாத சுவாமியே, தங்களுக்கு நமஸ்காரம். என் மனதிலிருந்து தீய எண்ணங்களை நீக்கி, என் நலன்களை பெருக்குமாறு உம்மை வேண்டுகிறேன்.(செவ்வாய், வியாழக்கிழமைகளில் இந்தத் துதியை பாராயணம் செய்தால், நம் மனதில் தீய எண்ணங்கள் உருவாகாது; அதனால் நம் வாழ்வும் நிம்மதி பெறும்; நலன்கள் பெறும்.)  

Related Stories: