காரைக்காலில் மாங்கனித் திருவிழா : மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புதுச்சேரி : புகழ்பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் தொடங்கியது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை போற்றும் வகையில் இந்த மாங்கனி திருவிழா நடத்தப்படுகிறது .பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து வழிபட்டு வருகின்றனர். காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக ஸ்ரீ கைலாசநாதர் கோவில் தேவஸ்தானம் சார்பில் காரைக்கால் அம்மையாரின் கோவிலில் ஒரு மாதமாக மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இதில் முக்கிய நிகழ்வாக இன்று சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாம்பழத்தை ஏந்திய வண்ணம் பவளக் கால் சக்கரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் காரைக்கால் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: