ஆடி மாத விசேஷங்கள்

ஆடி 1,  ஜூலை 17, புதன் - பிரதமை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள். திருக்கோயிலில் ஸ்ரீநரஸிம்மமூலவருக்குத் திருமஞ்சன ஸேவை. ஆஷாட பஹூள ப்ரதமை, ஆடிப்பண்டிகை தக்ஷிணாயன புண்யகாலம். ஸ்ரீஆதிகும்பேஸ்வரர்  மங்களாம்பிகை லட்சார்ச்சனை. ஆடிப் பண்டிகை, திருக்கடையூர், திருப்பறியலூர் ஸ்ரீவீரட்டேசுவர சுவாமிக்கும் திருக்குவளை ஸ்ரீதியாகராஜசுவாமிக்கும் அபிஷேகம். புதுக்கோட்டை அவதூத சதாசிவாள் ஆராதனை, கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சிவ தாரிணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Advertising
Advertising

ஆடி 2, ஜூலை 18, வியாழன் -  துவிதியை. திருவோண விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் அம்ருதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.  

ஆடி 3, ஜூலை 19, வெள்ளி - திரிதியை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன ஸேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவ சக்தி மண்படம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. வேளூர், சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு தலங்களில் ஸ்ரீஅம்பாளுக்கு சந்தனகாப்பும், நவசக்தி அர்ச்சனையும் நடைபெறும். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஊர்வசி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 4, ஜூலை 20, சனி - கிருஷ்ண பட்ச  ஸங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர் பகவான் சிறப்பு ஆராதனை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஒளஷதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 5, ஜூலை 21, ஞாயிறு - பஞ்சமி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் குசோதகை சக்திபீட விசேஷ

அபிஷேக ஆராதனை. ஹோமம்.

   

ஆடி 6, ஜூலை 22, திங்கள்  -  சஷ்டி. ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கிருஷ்ண பட்ச  சஷ்டி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ண காமாட்சி ஆலய  108 சக்திபீடம் மன்மதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 7, ஜூலை 23, செவ்வாய் - சப்தமி. நந்தம் ஸ்ரீமாரியம்மன் பூந்தேரில் பவனி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சஷ்டி விரதம். திருவாரூர் ஸ்ரீகமலை ஞானப் பிரகாசர் மாதாந்திர வழிபாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ண காமாட்சி ஆலய 108 சக்திபீடம் சத்யா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 8, ஜூலை 24, புதன் - அஷ்டமி.  ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.  தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் பவனி.கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் வந்தனீயா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 9, ஜூலை 25, வியாழன் - நவமி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் திருக்குளம் வலம் வருதல். வேளூர், சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு , திருச்சிமலைக்கோட்டை, மதுரை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் ஆகிய சிவஸ்தலங்களில் ஸ்ரீ அம்பாளுக்கு ஆடிப்பூர உற்சவ ஆரம்பம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் நிதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 10, ஜூலை 26, வெள்ளி - தசமி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் பரணி உற்சவம். படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு கண்டருளல். ஆடிக் கிருத்திகை திருத்தணி தெப்பம், பழநி ஆடிக் கிருத்திகை. தருமை ஸ்ரீஷண்முகர் அபிஷேகம், சென்னை - குரோம்பேட்டை குமரன்குன்றம் ஆடிக் கிருத்திகை, கிரிவலம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் காயத்ரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 11, ஜூலை 27, சனி - ஏகாதசி. கிருத்திகை விரதம். மூர்த்தியார். புகழ்ச்சோழர். வாஸ்துபு

ருஷன் நித்திரைவிட்டெழுதல். வேளூர் கிருத்திகை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ண காமாட்சி ஆலய 108 சக்திபீடம் பார்வதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 12, ஜூலை 28, ஞாயிறு - சர்வ ஏகாதசி. துவாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திரப் பிரபையிலும், ஸ்ரீரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா. கிருஷ்ணபட்ச  ஸர்வ ஏகாதசி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் இந்த்ராணி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 13, ஜூலை 29, திங்கள் - திரயோதசி. பிரதோஷம். சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன்  உற்ஸவாரம்பம். க்ருஷ்ணபட்ச  (ஸோம) மஹாப்ரதோஷம் (திதித்வயம்) ஸ்ரீகாஞ்சி ஸ்ரீஆசாரியாள் மடத்தில் வைதீக பிக்‌க்ஷாவந்தனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சரஸ்வதி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 14, ஜூலை 30, செவ்வாய்  - சதுர்த்தசி. மாத சிவராத்திரி. நாகப்பட்டினம் ஸ்ரீநிலாயதாக்ஷியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி, கூற்றுவ நாயனார் குருபூஜை. மாத சிவராத்திரி. வேளூர் ஆடிக் கிருத்திகை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பிரபா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 15, ஜூலை 31, புதன்  - சர்வ ஆடி அமாவாசை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் இரவு மின்விளக்கு அலங்கார வெள்ளித் தேரில் பவனி. திருவையாறு தென்கயிலாயத்தில் அப்பர்க்கு கைலாய காட்சிகொடுத்தல், பஞ்சமூர்த்திகள் காட்சிகொடுத்தல், நாகை நீலாயதாட்சி ரிஷபம், ராமேஸ்வரம் ஸ்ரீராமர் அக்னிதீர்த்தத்தில் தீர்த்தம், வெள்ளி ரதம், திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி மூலவர் பூலங்கி சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் வைஷ்ணவி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி  16, ஆகஸ்ட் 1, வியாழன்  - பிரதமை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தண்டியலில் பவனி. ஸ்ரீரெங்கமன்னார் யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் அருந்ததி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 17, ஆகஸ்ட் 2 , வெள்ளி - துவிதியை. ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடிச் சப்பரத்தில் ஸ்ரீஆண்டாள் மடி மீது ஸ்ரீரெங்கமன்னார் ஸயனத்திருக்கோலமாய்க் காட்சியருளல். ச்ராவண சுத்த ப்ரதமை சாந்த்ரமான ச்ராவண மாஸ ஆரம்பம் (திதி).ஆடிப்பூர உற்சவ திருத்தேர், சென்னை கொண்டித்தோப்பு இலந்தை முத்துமாரியம்மன் துவஜாரோகணம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் திலோத்தமை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

   

ஆடி 18 , ஆகஸ்ட் 3, சனி  - திருதியை.  ஸகல நதி தீரங்களிலும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா. திருஆடிப்பூரம், ஸ்வர்ண கௌரிவிரதம். திருக்கருகாவூர் கர்ப்ப ரக்க்ஷாம்பிகை புறப்பாடு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சக்தி பிரம்மகலை சக்தி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஆடி 19, ஆகஸ்ட் 4, ஞாயிறு  -  சதுர்த்தி. ஸ்ரீவில்லி

புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் பெருந்தேரில் பவனி வரும் காட்சி. சுக்லபட்ச  சதுர்த்தி நாக சதுர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரதம்.

ஆடி 20, ஆகஸ்ட் 5, திங்கள் - பஞ்சமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி. கருட பஞ்சமி , நாகபஞ்சமி. ராமேஸ்வரம் திருக்கல்யாணம். சுரைக்காய் ஸ்வாமிகள் ஜயந்தி.

ஆடி 21, ஆகஸ்ட் 6, செவ்வாய்  - சுக்லபட்ச  சஷ்டி.  ஸ்ரீகோமதியம்மன் ரிஷப வாகன  ஸேவை.    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி. பெருமிழலைக்குறும்பர்.

 

ஆடி 22, ஆகஸ்ட் 7, புதன் - சப்தமி. செவ்வாய் பேட்டை ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா. காஞ்சி ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை உற்சவம், காஞ்சி பவித்ர உற்சவம் ஆரம்பம்.

ஆடி 23, ஆகஸ்ட் 8, வியாழன்  - அஷ்டமி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கிருஷ்ணாவதாரம். சிம்மவாகனத்தில் திருவீதியுலா. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

ஆடி 24, ஆகஸ்ட் 9, வெள்ளி - நவமி. வரலட்சுமி விரதம். சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் பூப்பல்லக்கில் பவனி வரும் காட்சி. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் உற்ஸவம் ஆரம்பரம். (திதித்வயம்).

ஆடி 25, ஆகஸ்ட் 10, சனி - தசமி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. இன்று கருட தரிசனம் நன்று. கலிய நாயனார், கோட்புலி நாயனார் குரு பூஜை.

ஆடி 26, ஆகஸ்ட் 11, ஞாயிறு - ஸர்வ ஏகாதசி. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் ரதோற்ஸவம். சுக்லபட்ச  ஸர்வ ஏகாதசி. மயிலாடுதுறை ஸ்ரீசியாமளாதேவி புஷ்பாஞ்சலி, ஆடி உற்சவம், மடிப்பாக்கம் குபேரநகர் சீதளாதேவி கோவில் குருஜி அருளாற்றல், பழநி லட்சார்ச்சனை ஹோமம்.

ஆடி 27, ஆகஸ்ட் 12, திங்கள் - துவாதசி. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு. சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் ஸப்தாவரணம். சுக்லபட்ச  (ஸோம) மஹாபிரதோஷம்.

ஆடி 28, ஆகஸ்ட் 13, செவ்வாய் - திரயோதசி. வட மதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் திருக்கல்யாண வைபவம். குரங்கணி

ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. பட்டினத்தார் (அடியவர்). வேளூர் ஸ்ரீதுர்காம்பிகை புஷ்பாஞ்சலி, ஸ்ரீரங்கம் ஆடிப் பெருக்கு.

0ஆடி 29, ஆகஸ்ட் 14, புதன்  - பௌர்ணமி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவித்திர உற்சவம். ரிஷப  வாகன ஸேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருவீதியுலா. பௌர்ணமி. திருவோண விரதம். வேளூர் பவித்ரோத்சவம் பூர்த்தி.

ஆடி 30, ஆகஸ்ட் 15, வியாழன் - பிரதமை. ஆவணி அவிட்டம். ருக், யஜூர் உபாகர்மா. ஹயக்ரீவ ஜெயந்தி, ரக்ஷாபந்தனம். திருப்பனந்தாள் ஸ்ரீவீரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை, வேளூர் ஸ்ரீ முத்துகுமாரசுவாமிகள் மாகேஸ்வர பூஜை. காஞ்சி ஸ்ரீதேவராஜ்வாமி ஆடி கருடன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோயிலில் அருணகிரி நாதர் விழா.

ஆடி 31, ஆகஸ்ட் 16, வெள்ளி - துவிதியை. காயத்ரி ஜபம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ஸப்தாவரணம். அவிநாசி  ஸ்ரீகருணாம்பிகை அம்மனுக்கு விசேஷ வழிபாடு. ஊஞ்சல் உற்ஸவக் காட்சி. ச்ராவண பஹூள ப்ரதமை. பழநி  பெரியநாயகியம்மன் மகாபிஷேகம் வெள்ளி தேர். தருமை ஸ்ரீமஹாலக்ஷ்மி துர்க்காம்பிகை சந்நதியில் திருவிளக்கு பூஜை.

ஆடி 32, ஆகஸ்ட் 17, சனி - திருதியை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் வஸந்த உற்ஸவம்.

தொகுப்பு : ந. பரணிகுமார்

Related Stories: