திருவிளக்கில் ஏற்றப்பட்ட தீபம் தானாக அனையலாமா?

திருவிளக்கில் ஏற்றப்பட்ட தீபம் தானாக அனைய கூடாது. நாம் தான் குளிரச்செய்ய வேண்டும். தீபம் ஏற்றப்பட்டு அதற்குரிய நேரம் முடிந்ததும் பூவில் பாலைத் தொட்டு நாம் குளிரச் செய்யவேண்டும். அல்லது அரிசியை விளக்கில் எண்ணெய் இருக்கும் எந்தப் பகுதியிலாவது முதலில் வைத்துவிட்டு, பிறகு பூவினால் சுடரைக் குளிரச் செய்யலாம். இவ்விதம் தானாகச் சுடரைக் குளிரச் செய்வதை, `சுவாமி மலை ஏறுகிறார்’ என்கிறார்கள். பூஜைக்குப் பயன்படுத்திய பூவினாலும் (நிர்மால்யம்) சுடரைக் குளிரச் செய்யலாம். குளிரச் செய்யப்பெற்ற தீபங்கள் தங்களுக்குள், `எனக்குப் பூ கொடுத்தார்கள், உனக்கு என்ன கொடுத்தார்கள்?’ என்று, ஒன்றை ஒன்று விசாரித்துக்கொள்கின்றன என்று ஒரு கதை சொல்வார்கள்.

Advertising
Advertising

- எஸ். உமா மகேஸ்வரி

Related Stories: