தொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்

மனிதனின் வாழ்வில் எல்லா செல்வங்களும் இன்ன பிற சுகபோகங்களும் இளமைக்காலத்திலேயே கிடைப்பதே சிறந்ததாகும். ஆனால் தற்காலத்தில் உலகம் இருக்கும் நிலையில் பலருக்கும் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதே ஒரு மிகப்பெரும் சாதனையாக இருக்கிறது. பலர் தாங்கள் அனுபவிக்க வேண்டிய வாழ்வின் இன்பங்களை அனுபவிக்காமலேயே போய்விடுகின்ற நிலையும் பரவலாக காணப்படுகிறது. இத்தகைய பாதகமான நிலையை போக்க பிரபஞ்சமெங்கும் இருக்கின்ற தெய்வீக சக்தியின் அருள் நமக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட தெய்வீக சக்தியை நமக்குள் ஈர்த்துக் கொள்ள உதவும் ஒரு விஞ்ஞான பூர்வமான பூஜை ஹோமம் ஆகும். பல வகையான ஹோம பூஜைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் அவஹந்தி ஹோமம் ஆகும். இந்த அவஹந்தி ஹோமத்தை செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

புகழ்பெற்ற தைத்ரிய உபநிஷத் நூலில் அவஹந்தி ஹோமத்தின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு மட்டுமே உரிய ஒரு உயர்வான விடயமாக ஞானமும், அறிவும் இருக்கிறது. அவற்றை நமக்கு வழங்குபவர் குரு ஆவார். அந்த உயரிய ஞானத்தை வழங்கும் குருவினிடம் சீடனாக இருந்து நமது அறியாமையை போக்கி, உயர்ந்த ஞானத்தைப் பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமமாக இந்த அவஹந்தி ஹோமம் இருக்கிறது. மேலும் நம்மை சுற்றி நேர்மறையான அதிர்வுகள் நிறைந்திருக்கவும், வாழ்வில் மிகுதியான வளமை பெருகவும் அவஹந்தி ஹோமம் செய்யப்படுகிறது.

பௌர்ணமி தினங்கள், வளர்பிறை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தினங்களிலும், உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற சுப தினங்களிலும் அவஹந்தி ஹோமம் செய்வது மிக சிறந்தது. இந்த அவஹந்தி ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் அவஹந்தி ஹோமத்தின் போது யாகத்தீ வளர்த்து, மேதா, தன, சிக்ஷ, சாத்ய என நான்கு வித மந்திரங்கள் துதித்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி மற்றும் குங்குமம் போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது. இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபட்ட பிறகு அந்த அஸ்தி மற்றும் குங்குமத்தை தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வது நமக்கு நன்மைகளை உண்டாக்குகிறது.

அவஹந்தி ஹோமத்தை செய்து கொள்பவர்கள் விவசாய துறையில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு தானிய லட்சுமியின் அருள்கடாட்சம் முழுமையாக கிடைத்து விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி தொழிலில் மிகுதியான லாபங்களை பெற்றுத்தரும். பொருளாதார ரீதியிலான ஏற்றங்களை தரும். ஆன்மீக வாழ்வில் உயர்வை உண்டாக்கும். கல்வி, கலைகளை கற்றுக் கொள்வார்கள் அவர்களின் குருவின் முழுமையான ஆசிகள் கிடைத்து சிறப்படைவார்கள். தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கும். ஆக்கபூர்வமான சிந்தனைகள் கருத்துக்கள் உண்டாகும். உடல் மற்றும் மன நலம் சிறப்படையும். பிறருடன் சிறந்த முறையில் தொடர்பு கொண்டு நல்லுறவுகளை பேண முடியும்.

Related Stories: