வள்ளியை மணம் புரிந்த வேளிமலை குமாரகோவில்

குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம். குமரி மாவட்டத்தில் உள்ள குன்றுகளில் குமரனுக்கு கோயில்கள் இருந்தாலும், அதில் தனிச்சிறப்பு பெற்றது வேளிமலை குமாரகோவில் ஆகும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ளது வேளிமலை குமாரகோவில். 38 படிகள் கொண்ட இந்த கோயில் மண்டபத்தின் முன்புறம் வீரபாகுவும், வீரமகேந்திரரும் நிற்கின்றனர்.முன்மண்டப கோயிலில் கொடிமரம் செம்புத் தகடால் வேயப்பட்டுள்ளது. வீரபாகுவை அடுத்து விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மூலஸ்தானத்தில் எட்டே முக்கால் அடி உயரமான நின்ற கோலத்திலான சுப்பிரமணியர் சிலையும், அவரது இடது பக்கத்தில் ஆறேகால் அடி உயரத்தில் வள்ளி சிலையும் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை திருமணம் செய்து கொள்ளும் கோலம்போல் இங்கு முருகன் வள்ளியோடு காட்சியளிக்கிறார்.

Advertising
Advertising

கருவறையை அடுத்து சிவசந்நிதி உள்ளது. ஆறுமுக நயினாரும், நடராஜரும் தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர். தலவிருட்சம் வேங்கை மரமாகும். வேங்கையின் உருவமாகி வேற்படைவீரன் நின்ற இடத்தைத்தான் மரச்சந்நிதி என்று கூறுகின்றனர். குமாரகோயிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மலையின் மேல் திருக்கல்யாண மண்டபம் உள்ளது.இங்குள்ள சிறுகுகையில் வள்ளியம்மையின் சிலை உள்ளது. இதனையடுத்து திருப்புவனம், வள்ளிச்சோலை, வட்டச்சோலை, கிழவன்சோலை முதலிய இடங்கள் உள்ளன. இவை கோயிலுக்கு உடமைப்பட்டதாக உள்ளன. கோயிலின் முக்கியத் திருவிழா திருக்கல்யாணம் ஆகும்.விழாவன்று முருகன் மலைமேல் எழுந்தருளி வள்ளியை அழைத்து வருவார். அதனைக் கண்ட குறவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி போரிடுவர்.

இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். இந்த போர் நடைபெறும் இடம் குறவர் படுகளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது இங்கு வாழும் குறவர் இன மக்களே கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம் ஆண்டு தோறும் செலவுத் தொகை வழங்குகிறது.

விரையுறு நறுமலர் குமாரகோவிலில் கேரள தந்திரி முறைகளே பின்பற்றப்படுகின்றன. கேரள மக்கள் முருகனை தங்களது குலதெய்வமாக இன்றும் வந்து வழிபட்டு செல்கின்றனர். இவர்கள் இறைவனின் பாதங்களில் மலரிட்டு வணங்குவதையே நக்கீரர் ‘விரையுறு நறுமலர்..’ என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார். 15ம் நூற்றாண்டில், அருணகிரி நாதர், குடகாவிரி என்ற பாடலின் குறிப்பு வேளிமலையே திருவேரகம் என்று உணர்த்துகிறது. இந்த கோயில் 2ம் நூற்றாண்டிற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories: