இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூன் 22 , சனி -  சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் ரிஷபவாகன சேவை. திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மாண்டவீ சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 23, ஞாயிறு - சஷ்டி சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஸ்வாஹா  சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

 

ஜூன் 24 , திங்கள் - கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ப்ரசண்டா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 25, செவ்வாய் -  திருப்பதி ஸ்ரீஏழு

மலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் ரதோற்சவம். மதுராந்தகம் புஷ்ப பல்லக்கு. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் சண்டிகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 26, புதன் - ஏயர்கோன்கலிக்காமர், துர்காஸ்வாபனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த ஸாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் வராரோஹா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 27, வியாழன் -  ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் புஷ்கலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 28, வெள்ளி -  ஸ்மார்த்த ஏகாதசி. திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை. திருவிடைமருதுர் ஸ்ரீபிரகத்குஜாம்பிகை புறப்பாடு கண்டருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் தேவமாதா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Related Stories: