நேரில் வந்த நரசிங்கன்

கம்பர். ராமாயணத்தை சாலிவாகன வருடம் 807, அதாவது கிபி 885 ல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபத்தை  இன்றும் ரங்கநாச்சியார் சந்நதியின் முன்பு காணலாம்.  கம்பர், தனது ராம காவியத்தில் இரண்ய சம்ஹாரத்தை மிக அருமையாகப் படைத்திருந்தார்.

அதனை சில அறிஞர்களும் பெரியோர்களும்ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.ஆனால், ‘திசை திறந்(து) அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்’ என்ற சொற்களை கம்பர் வாசித்தபோது கோயில் கோபுரத்திலிருந்த நரசிம்ம மூர்த்தியின் திருவுருவம் அம்மண்டபம் முழுவதும் எதிரொலிக்குமாறு சிரித்ததோடு நில்லாமல் கம்பருடைய பேரறிவுடைமையைப் போற்றுவது போல் தன் தலையையும் ஆட்டியதாம்! ஆகவே, இதற்கு கம்பர் மண்டபம் என்ற பெயரும் உண்டு.கம்பர் நரசிம்ம உபாசகர். கம்பத்திலிருந்து தோன்றியதால் நரசிம்ம சுவாமிக்கு கம்பர் என்ற பெயரும் பொருந்தும். நரசிம்மரை உபாசனை செய்ததாலேயே கவிஞர்.
Advertising
Advertising

Related Stories: