×

கிரக தோஷங்களை போக்கும் உணவு பரிகாரங்கள்

உணவு பொருட்களின் மூலம் பல்வேறு கிரக தோஷங்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

மஞ்சள் : ஜாதகத்தில் அல்லது கோட்சாரத்தில் குரு(வியாழன்) வலிமை இழந்து இருப்பின் மஞ்சளை தினமும் பாலில் ஒரு மேஜை கரண்டி அளவு கலந்து குடித்து வருவது மிகச் சிறந்த பரிகாரம்.வெளியில் செல்லும் பொழுது மஞ்சளை உடன் வைத்திருக்கலாம். மேலும் மஞ்சள் தானம் செய்யலாம். மஞ்சளை ஆண்கள் நெற்றியில் இட்டுச் செல்வதும், பெண்கள் முகத்தில் பூசிச் செல்வதும் சிறப்பு தரும்.ஜாதகத்தில் வியாழன் -ஒன்று மூன்று ஏழு அல்லது பதினொன்று இடத்தில் அமர உடலில் ஆர்மோன் பிரச்னைகள் வரலாம். அதற்கும் பாலில் மஞ்சள் சேர்த்து அருந்துவது மிக சிறந்த பரிகாரம். குரு கெட்டிருக்கும் சமயம் மஞ்சள் காமாலை நோய்கள் வரலாம். அதற்கும் மேற்கண்டது மிக சிறந்த ஒன்று.

ஜிலேபி : சுக்கிரன் கெட்டிருப்பின் ஜிலேபி சாப்பிட்டு வருவது மிக சிறந்த ஒன்று. தினசரி காலை ஒன்று சாப்பிடலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சக்கரை இல்லாத ஜிலேபி வாங்கி உண்ணலாம். குழந்தை பேறு தாமதமாகும் பெண்கள் இதை தினசரி உண்டு வர சிறந்த பலன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம். தினம் ஒன்று போதுமானது. மேலும் இது முக வசீகரம் உண்டு செய்யும் ஒன்றாகும்.

கோதுமை : தந்தையுடன் பிரசனை, அரசு விவகாரங்களில் தொல்லை, வலது கண் நோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஜாதகத்தில் பலவீனமான சூரியனை குறிக்கும். மேலும் சூரியன் ஜாதகத்தில் இரண்டு, ஏழு, எட்டாம் இடங்களில் இருந்தாலும் சிறிதளவு கோதுமையை ஓடும் சுத்த நீரில் விடுவதும் (43 நாட்கள் செய்ய வேண்டும்-தொடர்ந்து). மேலும் சூரியனை வலுப்படுத்த : 5 டம்ளர் சுத்த குடி நீர் எடுத்து அதில் கோதுமை கால் கிலோ மற்றும் கருப்பு உளுந்து கால் கிலோ கலந்து அடுப்பில் வைத்து அதை பாதியாக வரும் அளவு கொதிக்க விட்டு, பின்பு சுத்தம் செய்து அதை ஒரு நாளில் மூன்று முறையாக அருந்தவும். இதை வாரம் ஒரு முறை செய்து வர சூரியனுக்கு மிக பலம் வாய்ந்த பரிகாரமாக அமையும். மேற்கண்ட பானம் உடலையும் மிகவும் பலப்படுத்தும்.

நெல்லிக்கனி : குரல் பிரச்னைகள் அல்லது திக்கு வாய், சரியாக பேச்சு வராத தன்மை, ஞாபக மறதி, சகோதரிகளுடன் சண்டை, ரத்த அழுத்தம்,பலவீனமான எலும்புகள், மலம் சரியாக வெளியேற்றம் இல்லாமை போன்றவை ஜாதகத்தில் புதனால் ஏற்படும் ஒன்றாகும். இதற்கு தினசரி ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டு வருவது சிறந்த பரிகாரமாக அமையும், அல்லது இரவு படுக்கும் முன் நெல்லிக்காய் பவுடரை நீரில் கலக்கி குடித்து வரலாம். மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக இதை கடை பிடிக்க கல்வியில் மிக நல்ல முறையில் தேறலாம்.

அரிசி : சந்திரனை வலுப்படுத்த மிக சிறந்த பரிகாரம் அரிசி தானம். மேலும் தங்கள் தாயை சிறிது அரிசி மற்றும் வெள்ளி காசுடன் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுவது சந்திரனை நம் ஜாதகத்தில் வலுவாக்கும் ஒன்றாகும். வெள்ளை சாதத்தை பிசைந்து இந்துப்பு மற்றும் சிறிது மிளகு பொடி கலந்து குடித்து வர உடலும் மெலியும்-சந்திரனுக்கும் பரிகாரமாகும்.

வாமனன் சேஷாத்ரி

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?