இந்த வாரம் என்ன விசேஷம்?

ஜூன் 15, சனி - நம்மாழ்வார் திருநட்சத்திரம். ஷடசீதி புண்ணிய காலம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் விந்த்ய வாஸினி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Advertising
Advertising

ஜூன் 16, ஞாயிறு - பௌர்ணமி.  திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை. முப்பழம் சாத்துதல், பட்டீஸ்வரம் முத்துப்பந்தல், திருவஹிந்திரபுரம் சுவாமி தேசிகர் ஜேஷ்டாபிஷேகம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மஹாலக்ஷ்மி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 17, திங்கள் - திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு கண்டருளல். திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி நெல்லிக்குப்பம் தோப்பு உற்சவம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கருடசேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் உமா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 18, செவ்வாய் - சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் பாற்குட காட்சி. இரவு புஷ்பப்பல்லக்கில் பவனி. மதுராந்தகம் பெரியபெருமாள் உற்சவம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஆக்ரோயை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 19, புதன் - சோழவந்தான் ஸ்ரீஜனக மாரியம்மன் பூக்குழி விழா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ நரஸிம்ம மூவருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் மாஹேச்வரி சக்திபீட விசேஷ அபிஷேக

ஆராதனை. ஹோமம்.

ஜூன் 20, வியாழன் - சங்கடஹர சதுர்த்தி. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் அபயா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

ஜூன் 21, வெள்ளி - சதுர்த்தி விரதம், மதுராந்தகம் தீர்த்தவாரி, சென்னை ஸ்ரீசுகப்பிரம்ம ஆசிரம ஸ்ரீசுகப்பிரம்ம மகரிஷி ஜெயந்தி விழா. திருவோணவிரதம். உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீஸ்ரீனிவாஸப்பெருமாள் புறப்பாடு. திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் சக்ர ஸ்நானம், காஞ்சி ஸ்ரீதேவராஜஸ்வாமி ஜேஷ்டாபிஷேகம்.  திருவோண விரதம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் நிதம்பை சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

Related Stories: