காப்பரிசி

தேவையான பொருட்கள்:

Advertising
Advertising

பச்சரிசி - 1 கப்,

வெல்லம்- 1/2 கப்,

பல் பல்லாக நறுக்கிய தேங்காய் அல்லது கொப்பரை- 1/4 கப்,

வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 1/4 கப்,

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,

நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை சுத்தம் செய்து 15 நிமிடம்ஊறவைத்து வடித்து, ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்றாக ஈரம் போக உலர்த்தி எடுக்கவும்.கடாயை சூடாக்கி அரிசியை போட்டு பொரி அரிசியை போல் கைவிடாமல் வறுக்கவும். அரிசி சிவந்துநன்றாக வறுபட்டதும் நெய் ஊற்றி லேசாக வதக்கி எடுத்து தாம்பாளத்தில் கொட்டவும். அதனுடன்வறுத்து தோலுரித்த வேர்க்கடலை, லேசாக வறுத்த பொட்டுக்கடலை, கொப்பரை சேர்த்து கலந்துகொள்ளவும். பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிமீண்டும் அடுப்பில் வைத்து உருட்டும் பதம் வந்ததும் அரிசி கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்துநன்கு கைவிடாமல் கிளறி இறக்கவும்.

Related Stories: