உயரமான லிங்கம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ளது பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருநாமம் சிவகாமி அம்மன் என்பதாகும். இந்த அம்மனின் முகம் எப்போதும் வியர்த்துக் கொண்டே இருக்குமாம். அதே போல் இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் பார்ப்பவர்களின் பார்வை எந்த உயரமோ அந்த அளவுக்கு உயரமாக காட்சி தருவதும் அதிசயங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

- S. அமிர்தலிங்கம்,

காதில் துளையோடு அதிசய பைரவர்

சிவன் கோயில்களில் பைரவரை கண்டு தரிசிக்கிறோம். காதில் தோடு போடும் அளவுக்கு ஓட்டையுள்ள பைரவரை கண்டு அதிசயிக்கிறோம். பைரவர் சுமார் 4 அடி உயரம். மேற்கு பார்த்து வீற்றிருக்கிறார். காதில் காதணி போடும் அளவுக்கு ஓட்டை உள்ளது. இவருக்கு அஷ்டமி பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. மிளகு முடிச்சு தீபமும் போடுகிறார்கள். இந்த அதிசய காதில் ஓட்டை உள்ள பைரவர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் புத்தூர் அருகில் பட்டுக்குடி என்ற ஊரில் உள்ள பசுபதி ஈஸ்வரர் மங்களாம்பிகை கோயிலில் இந்த பைரவர் காட்சி அளிக்கிறார். கணபதி அக்ரகாரம் சென்று அங்கிருந்து ஆட்டோவில் செல்ல வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக் கோயில் உள்ளது. பைரவரை தரிசியுங்கள் பலன் அடையுங்கள்.

- பாபநாசம் வி.பி.கே.மூர்த்தி

Related Stories: