காலையில் கோலமிடுவது எதற்கு?

அதிகாலையில் முற்றம் கூட்டித் தெளித்த பின் வாசலில் அழகான கோலமிடுவது நம் நாட்டில் இன்றும் தொடர்கிறது. இதில் ஒர் பெரிய பௌதிக உண்மை அடங்கியிருக்கின்றது. மனிதன் பிற உயிரினங்களிடம் கருணை காட்டி வாழ்வதற்கு அனேகம் உதாரணங்கள் நம்மிடையே உண்டு. நாம் உணவாகப் பயன்படுத்தும் அரிசியின் பொடியே முற்காலத்தில் கோலம் போட உதவும் மாவு.இன்றும் சிலர் அரிசி மாவில் கோலம் இடுகின்றனர். நாம் உணவருந்தும் முன் எறும்பு முதலிய சிறுபிராணிகளுக்கு உணவளிப்பது என்ற மனித தர்மத்தின் பாகமே கோலம் இடுதல்.

- இ.ஜெ. தீபா

Related Stories: