×

நடிகரான இயக்குனர்

சென்னை: நெல்லை சந்திப்பு, உத்ரா படங்களை இயக்கியதோடு விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான சகாப்தம் படத்தின் கதாசிரியருமான நவீன், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோழிப்பண்ணை செல்லத்துரை படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகருக்கான தகுதிகள் இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி இவரை பாராட்டியிருக்கிறார். தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்கும் ஒரு புதிய படத்திலும் மற்றும் வேல் குமரேசன் இயக்கும் வசூல் மன்னன், ரிஷிராஜ் இயக்கும் காட்டான் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நவீன்.

The post நடிகரான இயக்குனர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Naveen ,Vijayakanth ,Sanmukhapandyan ,Seenuramasamy ,Yogi Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முரசொலி செல்வம் மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல்