இந்த வாரம் என்ன விசேஷம்?

மே 25 - சனி -  தருமை ஞானபுரீஸ்வரர் கோயிலில் 108 சிவபூஜை புரிதல். பகலில் ஆதீன 26வது குரு மஹாசந்நிதானம் பட்டினப் பிரவேசம்.  வடலூரில் சத்திய தருமசாலை தோற்றுவித்த நாள். மன்னார்குடி ஸ்ரீபெரியவா ஜெயந்தி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில்  ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108  சக்திபீடம் அமோகா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 26, ஞாயிறு - திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்குத் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல்  ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் பாடலா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.
 
மே 27, திங்கள் - கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் நாராயணி சக்திபீட விசேஷ  அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 28, செவ்வாய் - காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் பெரியநாயகியம்மன் திருத்தேர். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட  தங்கப் பூமாலை சூடியருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ருத்ரசுந்தரி சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை.  ஹோமம்.

மே 29, புதன் - அக்னி நட்சத்திர நிவர்த்தி. தத்தாத்ரேய ஜெயந்தி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்ய நன்று. திருப்பதி  ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் விபுலா சக்திபீட விசேஷ அபிஷேக  ஆராதனை. ஹோமம்.

மே 30, வியாழன் - ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள்  ஸ்ரீரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். கண்ணந்தாங்கல் ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் கல்யாணி சக்திபீட விசேஷ  அபிஷேக ஆராதனை. ஹோமம்.

மே 31, வெள்ளி - துவாதசி. பிரதோஷம்.  திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. கண்ணந்தாங்கல்  ஸ்வர்ணகாமாட்சி ஆலய  108 சக்திபீடம் ஏகவீரா சக்திபீட விசேஷ அபிஷேக ஆராதனை. ஹோமம்.


Tags :
× RELATED அச்சம் தீர்ப்பாள் அய்யாளம்மன்