×

மாவிளக்கு

தேவையான பொருட்கள்

பச்சரிசி    -    1/2 கிலோ
ஏலக்காய்    -    5
வெல்லம்    -    1/4 கிலோ
நெய்        தேவையான அளவு
திரி        2

செய்முறை


பச்சரிசியைக் கழுவி களைந்து விட்டு ஒரு துணியில் பரப்பி விட்டு காயவைக்கவும். லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போது மிக்ஸி அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மாவு அரைக்கும் போது  ஏலக்காயை சேர்த்து அரைக்கவும். பின் வெல்லத்தைத் துருவி அல்லது தூள் துளாக நுணுக்கி அரைத்த அரிசி மாவுடன் கலந்து வைக்கவும். அதில் சிறிதளவு பால் ஊற்றி கொள்ளலாம். பின்னர் அதனை நன்றாக பிசறி விட்டு உருண்டையாக உருட்டவும். உருண்டையின் மேல் எலுமிச்சை பழத்தை அழுத்தினால் சிறிது குழிப்போல அச்சு பதியும். குழியின் ஓரத்தில் மூன்று இடத்தில் குங்குமம் பொட்டு வைத்து நெய்விட்டு திரி போட்டுவிளக்குகேற்றி வைக்கவும். கம கமக்கும் மாவிளக்கு தயார்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி