இந்த வாரம் என்ன விசேஷம்?

ஏப்ரல் 27, சனி  

நடராஜர் அபிஷேகம். சித்தர்காடு ஸ்ரீகாழிச்சிற்றம்பல நாடிகள் குருபூஜை. திருச்செந்தூரில் சங்காபிஷேகம். திருவோணவிரதம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. செம்பொனார்கோவில் ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர் பவனி. சென்னை சென்னகேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கு. புண்ணியகோடி விமானத்தில் பவனி.

ஏப்ரல் 28, ஞாயிறு  

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதியுலா. கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை. சென்னை சென்னகேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி. வீரபாண்டி கௌமாரியம்மன் புறப்பாடு.

ஏப்ரல் 29, திங்கள்  

திருப்பைஞ்ஞீலி அப்பர் கூட்டமுது. பின்னிரவு திருப்புகலூரில் அப்பர் ஸ்வாமிகள் மோட்சக்காட்சி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி சந்நதியில் நான்கு கருட சேவை. திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை.

ஏப்ரல் 30, செவ்வாய்
 

ஏகாதசி. திருச்செங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் உற்சவாரம்பம், திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.

மே 1, புதன்  

திருக்குவளை பிரம்மோற்சவம் ஆரம்பம். அஹோபிலமடம் ஸ்ரீமத் 32வது பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் புஷ்ப பல்லக்கில் பவனி.

மே 2, வியாழன்
 

பிரதோஷம். திருவண்ணாமலை பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை. புதுவண்ணை ஞானசுந்தர பிரம்மன் குருபூஜை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

மே 3, வெள்ளி   

சீர்காழி முத்து சட்டைநாதர் உற்சவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சித்திரை தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப்பெருமாளுக்குத் திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை.

Related Stories: