×

மாங்காய் இனிப்பு பச்சடி

தேவையான பொருட்கள்:
 
மாங்காய் - 1
வெல்லம் -  2

வேப்பம்பூ - 1 ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - சிறிது
உளுந்து - சிறிது
மிளகாய் தூள் -  2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிதளவு

செய்முறை :

மாங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி வைத்து கொள்ளவும். முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, மிளகாய் தூள், வேப்பம்பூ, கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய  மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்கவும்.  மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பாகு செய்ய வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து  இறக்கி விடவும்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி