ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணி: ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைப்பெற்று வந்தது. அதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம், லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், கோபூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது.

பின்னர் புனிதநீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது அப்பந்தாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழஙக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: