முஸ்தாபி சூரணம்

எப்படித் தயாரிப்பது?

தேவையான பொருட்கள் :

கோரைக் கிழங்கு - 10

அரிசி மாவு - 1 கிலோ

பூரா சர்க்கரை - 1 கிலோ

ஏலக்காய் - 15

நெய் - 400 கிராம்.

கோரைக் கிழங்கையும், ஏலக்காயையும் நன்கு பொடியாக்கி தூளாக்கிக் கொள்கிறார்கள். அதில் அரிசி மாவு, பூரா சர்க்கரை (குழைவுச் சர்க்கரை), நெய்யையும்  ஊற்றி உருண்டையாகப் பிடித்து வராஹருக்கு காலை 10 மணியளவில் பூஜை முடிந்தபின் நிவேதனம் செய்கிறார்கள். முஸ்தாபிசூரணம் என்று அழைக்கப்படும்  இந்த மகாபிரசாதம் நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களால் போற்றப்படுகின்றது.

Related Stories: