கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூர்: அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்.

அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில் பழமையான கலியுக வரதராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் தேர் திருவிழா நடந்து வருகிறது. அதேபோல் இந்தாண்டும் கடந்த 13ம் தேதி ராமநவமியன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. கொடியேற்று விழாவன்று சூரிய வாகனம், இரண்டாம் நாள் வெள்ளி பல்லக்கு சிம்ம வாகனம், மூன்றாம் நாள் வெள்ளி பல்லக்கு புன்னைமர வாகனம், நான்காம் நாள் வெள்ளி பல்லக்கு வெள்ளிசேஷ வாகனம், 5ம் நாள் வெள்ளி பல்லக்கு கருட வாகனம் (சதுர்முக படத்தேர்), 6 நாள் வெள்ளி பல்லக்கு யானை வாகனம், 7ம் நாள் திருக்கல்யாணம் படிச்சட்ட கண்ணாடி பல்லக்கு, 8ம் நாள் வெள்ளி பல்லக்கு வெள்ளி குதிரை வாகனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

9ம் தேதி நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் சின்ன தேரில் ஆஞ்சநேயர் சுவாமியும், பெரிய தேரில் கலியுக வரதராஜபெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளும் எழுந்தருளிய தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர். பக்தர்களின் வசதிக்காக தங்கும் இடவசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, அன்னதானம், தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் விழாக்கால சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது, அரியலூர் எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஏகாந்த சேவை நடக்கிறது.

Related Stories: