×

இந்த வாரம் என்ன விசேஷம்?

ஏப்ரல் 20,  சனி  

திருவையாறு ஸப்த ஸ்தானம், ஐயாறப்பர் விசித்திர கண்ணாடி சிவிகையிலும் நந்திகேஸ்வரர் வெட்டிவேர் சிவிகையிலும் ஸப்தஸ்தல பிரதஷிணம். கோயம்புத்தூர் ஸ்ரீதண்டு மாரியம்மன் திருவீதிவுலா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் காலைசேஷ வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டலம் எழுந்தருளல்.

ஏப்ரல் 21, ஞாயிறு
 

திருவையாறு ஐயாறப்பர் ஆரூர் ஸ்வாமிகளுடன் ஆலயத்திற்குள் வரும் ஆனந்தக் காட்சி பூ போடுதல். இரவு சுத்தாபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கருடசேவை.

ஏப்ரல் 22, திங்கள்   


சங்கடஹரசதுர்த்தி. திருச்சி உய்யக்கொண்டான் சம்வத்சராபிஷேகம், காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் வெள்ளி ரதம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் மலைக்குப் புறப்பாடு.

ஏப்ரல் 23, செவ்வாய்  

காஞ்சி பாலூரில் திருவூரல் உற்சவம்.  சென்னை சென்னகேசவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம். வீரபாண்டி கௌமாரியம்மன் புறப்பாடு.

ஏப்ரல் 24, புதன்  

ஸ்ரீ வராஹ ஜெயந்தி. காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் பஞ்சமூர்த்தி உற்சவம், சித்திரை நாகர்கோவிலில் சூரிய பூஜை. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்தியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு கண்டருளல்.

ஏப்ரல் 25, வியாழன்.

சஷ்டி  ஸ்ரீரங்கம் விருப்பன் திருநாள் தொடக்கம்,  கோயம்புத்தூர் ஸ்ரீதண்டு மாரியம்மன் புறப்பாடு. சுவாமி மலைஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

ஏப்ரல் 26, வெள்ளி  

திருச்செந்தூர் ஸ்ரீநடராஜர் பாலாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவைகுண்டபதி இத்தலங்களில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு.

Tags :
× RELATED அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள்