×

பாபாவின் மீது மாறாத நம்பிக்கையும், பக்தியும் உள்ளவர்கள் அனுகிரகத்தை பெறுவார்கள்

கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கடவுள் அற்புதத்தைச் செய்வதே இல்லை. நம்பிக்கையில்லாதவர்களுக்கு கடவுளிடமிருந்து அற்புதத்தைப் பெற இயலுவதுமில்லை என்றும் கூறலாம். எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்கு தன்னம்பிக்கையைத் தருகிறார்.

ஒருவன் எவ்வளவுதான் நசுக்கப்பட்டவனாக இருந்தாலும், இம்மசுதியில் கால் வைத்தவுடனே மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான். இங்கேயுள்ள பாபா மிகவும் அன்பானவர். இவர் இவ்வியாதியைக் குணப்படுத்துவார். அன்புடனும், ஆசையுடனும் எல்லோரையும் பாதுகாப்பார், என்று, பக்தனுக்கு பாபா நம்பிக்கை தருவார். பல வேளைகளில் நமது நம்பிக்கை ஆட்டம் காணும் அளவுக்குப் பிரச்சனைகள் அதிகமாகும். நம்பிக்கையே போய்விடும். பாபா தான் என்னோடு இருக்கிறாரே! என தைரியமாக இருக்கிறாயா? என்பதை அவர் கவனிப்பார். என்ன செய்யப்போகிறாய் என வேடிக்கைப் பார்பார்.

ஓர் பக்தன் எவ்வளவு தூரம் நெஞ்சுரங் கொண்டவனாகவும் தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் உடனடியான பிரதிச் செயலும் இருக்கிறது. உள்ளவர்களை நான் அதிகம் நேசிக்கிறேன். மேதையைத் தள்ளி பேதையிடம் என் ஞானத்தை வெளிப்படுத்துகிறேன். குழந்தைகளின் வார்த்தைகளால் உலகத்தோடு பேசுகிறேன். இதையெல்லாம் புரிந்து கொண்டு, எழுந்து தைரியமாகப் போ! எதையும் தாங்கிப் பார் வாழ்ந்து விடலாம். இந்த சாயி உன் பின்னாலும், உனக்கு முன்னாலும், உன்னை பக்கவாட்டுகளிலும் சூழ்ந்து கொண்டு உடன் வருகிறான் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு என் பெயரை உச்சரித்து வா!

Tags : Baba ,
× RELATED தவறான விளம்பரங்கள் தொடர்பாக பதஞ்சலி...