ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீப விழா

மரக்காணம்: மரக்காணம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது சாந்தசொரூப ஆஞ்சநேயர் கோயில். இந்த கோயிலில் சித்திரை வருடப்பிறப்பை

முன்னிட்டு 27ஆம் ஆண்டு லட்சதீப விழா நடந்தது. இதனையொட்டி காலை 7 மணி முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள்
Advertising
Advertising

நடந்தது. இதனை தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சந்தனக்காப்பு, வடை மாலை அணிவித்தல், துளசி மாலை அணிவித்து கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றினர். தொடர்ந்து வாண வேடிக்கையுடன் மேடை நிகழ்ச்சிகளும் நடந்தது. இதில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Related Stories: