ஸ்ரீவர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா

வானூர்:  விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஸ்ரீவர்ணமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா கடந்த 5ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், அபிஷேக ஆராதனையும், சாமி வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குடம் ஊர்வலம், அலகு குத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் பெண்கள் பால்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் உடம்பில் அலகு குத்திக்கொண்டும், சிலர் விமான அலகு குத்திக்கொண்டும் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் வானூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். தொடர்ந்து இன்று (17ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: