×

மாணவர்களுக்கான ஆஸ்கர் இரண்டு இந்தியர்கள் சாதனை

லாஸ்ஏஞ்சல்ஸ்: அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கான ஆஸ்கர் விருது போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து 738 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து 2,683 படைப்புகள் பங்கேற்றன. இதில் மாணவர்கள் தயாரித்து, இயக்கிய 15 ஆவணப் படம் மற்றும் குறும்படங்கள் சிறந்ததாக தேர்வாகின. இதில் இந்திய மாணவர்கள் 2 பேர் இடம்பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

சமீபத்தில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இந்திய மாணவர் ரிஷப் ராஜ் ஜெயின், ‘எ ட்ரீம் கால்ட் குஷி’ என்ற தலைப்பில் தயாரித்த ஆவணப்படத்திற்கு மாணவர் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள ஒரு ரோஹிங்கியா அகதியின் கதையை சொல்லும் ஆவணப்படமிது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அகாடமியை சேர்ந்த பிலிம் டிசைன் மாணவர் அக்ஷித் குமாருக்கும் விருது கிடைத்துள்ளது. இவர் குறும்படத்தை இயக்கியிருந்தார்.

The post மாணவர்களுக்கான ஆஸ்கர் இரண்டு இந்தியர்கள் சாதனை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Los Angeles ,Academy of Motion Picture Arts and Sciences ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமெரிக்காவில் பயணிகளுடன் பேருந்து கடத்தல்..!!