×

மையல் படம் மூலம் தமிழுக்கு வந்தார் சம்ரித்தி

சென்னை: மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழில் ‘மையல்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘மையல்’ படத்தில் தனது பணி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட சம்ரித்தி, ‘இந்தப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே புகழ்பெற்றவர் சம்ரித்தி. மிஸ் க்ரிஹலக்ஷ்மி ஃபேஸ் கேரளா 2019 மற்றும் ஸ்டார் மிஸ் ஃபேஸ் ஆஃப் இந்தியா 2021 ஆகிய பட்டங்களை வென்றவர். மலையாளத்தில் ‘பிரதி பூவன்கோழி’, ‘சுமேஷ் மற்றும் ரமேஷ்’, ‘கைபோல’ படங்களில் நடித்தார். இப்போது ‘பரன்னு பரன்னு பரன்னு செல்லன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

The post மையல் படம் மூலம் தமிழுக்கு வந்தார் சம்ரித்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samrithi ,Chennai ,Samrithi Tara ,Samriti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...