- தோசை ராஜா
- ரஜினிகாந்த்
- அமிதாப் பச்சன்
- பகத் பாசில்
- மன்ஜு வாரியர்
- டி எஸ் குனாவேல்
- சரவண பவன் ராஜகோபால்
- ஜீவஜோதி
- சூர்யா
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், மற்றும் மஞ்சு வாரியர் நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் த.செ.ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார். சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான த.செ.ஞானவேல், ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஞானவேல் உண்மை கதையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மறைந்த சரவண பவன் ராஜகோபால் – ஜீவ ஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ‘தோசா கிங்’ என்ற பெயரில் உருவாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஞானவேலுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார் ஹேமந்த் ராவ். இவர் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சப்த சாகரடாச்சே எல்லோ சைடு ஏ/பி’ படத்தின் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ‘ வேட்டையன்’ படத்துக்குப் பிறகு தோசா கிங் ! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.