×

மாடியில் இருந்து குதித்து மலைகாவின் தந்தை தற்கொலை

மும்பை: ‘உயிரே’ படத்தில் ‘தக்க தைய்யா தைய்யா’ பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் நடிகை மலைக்கா அரோரா. மும்பையில் வசித்து வரும் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, நேற்று காலை 9 மணியளவில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், மலைகாவின் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் அனில் அரோராவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவலறிந்த மலைகாவின் முன்னாள் கணவரும் சல்மான் கானின் தம்பியுமான அர்பாஸ் கானும், அவரது வீட்டிற்கு சென்றார். அனில் அரோரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய வணிகக் கடற்படையில் பணியாற்றிய அனில் அரோரா மலையாளி கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் பாலிகார்ப்பை மணந்தார். இந்நிலையில் மலைகாவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மாடியில் இருந்து குதித்து மலைகாவின் தந்தை தற்கொலை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malaika ,Mumbai ,Malaika Arora ,Anil Arora ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை