×

தொழிலதிபருடன் ரம்யாவுக்கு நிச்சயதார்த்தமா?

பெங்களூரு: ‘பொல்லாதவன்’, ‘குத்து’, ‘சிங்கம் புலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. இவர் ரம்யா என்ற பெயரில் சினிமாவில் அழைக்கப்படுகிறார். கன்னடத்தில் பிரபல நடிகையான ரம்யாவுக்கு டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் பிரபவ் சவுத்ரியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. இது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தகவலை ரம்யாவுக்கு நெருங்கிய சிலர் மறுத்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், ‘ரம்யாவுக்கும் பிரபவ் சவுத்ரிக்கும் நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் ரம்யா அதை முறைப்படி அறிவிப்பார். அவர் ரகசியமாக எதையும் செய்ய மாட்டார்’ என்றனர். கன்னடத்தில் கடைசியாக ‘ஹாஸ்டல் பாய்ஸ் வான்டட்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்தார். மேலும் ‘ஸ்வாதி முதின பிரேம் ஹனியே’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

The post தொழிலதிபருடன் ரம்யாவுக்கு நிச்சயதார்த்தமா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ramya ,Bengaluru ,Divya Spandana ,Delhi ,Prabhav Chaudhary ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சுற்றுலா பயணிகள் பஸ் மீது தாவி...