×

ராணா, துல்கர் இணைந்து தயாரிக்கும் காந்தா

ஐதராபாத்: நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம்மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான ‘காந்தா’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி நடிக்கின்றனர். படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி கூறும்போது, “‘காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது.

தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக ‘காந்தா’ இருக்கும்” என்றார். தெலுங்கு ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ‘காந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

 

The post ராணா, துல்கர் இணைந்து தயாரிக்கும் காந்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kanda ,Rana ,Dulquer ,Hyderabad ,Rana Dagupathi ,Suresh Productions ,Dulquer Salmaan ,Wayfarer Films ,Selvamani Selvaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை?