×

லப்பர் பந்து படத்துக்காக விசேஷ பயிற்சி: ஹரீஷ் கல்யாண்

சென்னை: ‘பார்க்கிங்’ என்ற படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘லப்பர் பந்து’. இதை தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். அ.வெங்கடேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். இன்னொரு ஹீரோவாக ‘அட்ட கத்தி’ தினேஷ், ஹீரோயின்களாக ‘வதந்தி’ சஞ்சனா, சுவாசிகா விஜய், முக்கிய வேடங்களில் காளி வெங்கட், தேவதர்ஷினி, பாலசரவணன், டிஎஸ்கே நடித்துள்ளனர்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். வரும் 20ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: நகரத்து இளைஞனாகவே நடித்த எனக்கு கிராமத்து ரோலில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும், விளையாட்டு சம்பந்தமான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்தது. இரண்டும் இப்படத்தில் எனக்கு அமைந்து விட்டது. கதையைக் கேட்டேன்.

குறிப்பிட்ட ஒரு கேரக்டரில் அவர் நடிப்பதற்கு சம்மதிப்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதை உடைத்தெறிந்து ‘அட்ட கத்தி’ தினேஷ் நடிக்க சம்மதித்தார். என் திறமையை மதித்து யார் விளையாட அழைத்தாலும், அவர்களுக்காக சென்று விளையாடும் ஆக்ரோஷ இளைஞன் கேரக்டரில் நடிக்கிறேன். எதிரியாக இருந்தாலும் திறமையை மதிக்கும் ஒரு கேரக்டரில் ‘அட்ட கத்தி’ தினேஷ் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டுக்கு படத்தில் முக்கிய பங்கு இருக்கிறது.

எனது கேரக்டர் பவுலிங் ஆல் ரவுண்டர் என்பதால், அதற்காக விசேஷ பயிற்சி பெற்றேன். எனது தோற்றம், பாடிலாங்குவேஜ், மேனரிசங்கள் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. தமிழரசன் பச்சமுத்து எனக்கு லுக் டெஸ்ட் எடுத்தது, நடிப்பை வாங்கியது உள்பட பல்வேறு விஷயங்களை என்னால் மறக்க முடியாது. கிரிக்கெட் பிரியர்களுக்கு மட்டுமின்றி, பொழுதுபோக்குப் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கும் ‘லப்பர் பந்து’ சரியான விருந்தாக இருக்கும்.

The post லப்பர் பந்து படத்துக்காக விசேஷ பயிற்சி: ஹரீஷ் கல்யாண் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Harish Kalyan ,Tamilarasan Pachamuthu ,S. Laxman Kumar ,Prince Pictures ,A. Venkatesh ,Atta ,Kalyan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED லப்பர் பந்து வெற்றிக்கு என்ன காரணம்? ஹரீஷ் கல்யாண்