ஸ்ரீவழிவிடு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திர பெருவிழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 79ம் ஆண்டு பங்குனி உத்திரவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் 79ம் ஆண்டு பங்குனி உத்திரபெருவிழா நடைபெற்றது. கடந்த 10ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், நடைபெற்றன. மாலையில் சமய சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று அதிகாலை காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் நொச்சியூரணி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிருந்து வேல் காவடி, மயில்காவடி, பறவைக்காவடி, பால்காவடி, பன்னீர்காவடி, சப்பரகாவடி, பால்குடம் என பல விதமான காவடிகள் எடுத்து வந்தனர்.

Advertising
Advertising

குழந்தைகள், பெரியவர்கள் ஏராளமான பெண்கள் நேர்த்திகடன் செலுத்தினர். காவடி, பால்குடங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கி.மீ., தூரம் நடந்து சென்று வழிவிடு முருகன் கோயிலை வந்தடைந்தது. இரவு 7 மணிக்கு பூக்குழி உற்சவம் நடைபெற்றது. பங்குனி உத்தர பெருவிழாவைக் காண சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் நகர் முழுவதும் வெயிலையும் பொருட்படுத்தாது கூடி நின்று பால்குடம் காவடிகளை பார்த்து ரசித்தனர்.

Related Stories: