×

அரிஞ்சிகை ஈஸ்வரன் கோயிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசும் அபூர்வ நிகழ்வு

சிப்காட்:  வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா மேல்பாடி பொன்னையாற்றங்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தபஸ்கிருதம்மாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் எதிரே தென்பகுதியில் 200 அடி தொலைவில் அவரது பாட்டனார் ஆரூர் துஞ்சியதேவனின் கல்லறை உள்ளது. கிமு 1014ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணமடைந்த ஆரூர் துஞ்சியதேவனுக்காக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கல்லறை மீது அரிஞ்சிகை ஈஸ்வரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இங்கு கல்லறை மீது விற்றிருக்கும் சுவாமி சிலை மீது சூரிய ஒளி வீசும் அபூர்வ காட்சி நேற்று காலை 6.20 மணி முதல் 6.50 வரை நடைபெற்றது.

அப்போது, பொன்நிறத்தில் சிவன் காட்சியளித்தார். இதனை மேல்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.  சுவாமி சிலை மீது சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வு மார்ச் 21ம் தேதி (நேற்று முதல் மார்ச் 24ம் தேதி முடிய 4 நாட்கள் (பங்குனி மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை)  காலை 6.20 முதல் 6.50 மணி வரை நடைபெறுகிறது.

Tags : sunshine ,Swami ,Aranjiga Eswaran Temple ,
× RELATED தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது!