வலையபட்டி மலையாண்டி கோயிலில் அக்னி பால்குட விழா

பொன்னமராவதி: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டி மலையாண்டி கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி அக்கினி பால்குட விழா நடந்தது. விழாவையொட்டி வலையாண்டி மலையாண்டி கோயில் முன் இரண்டு அக்னிக்குண்டம் வளர்க்கப்பட்டிருந்தது. சிவன்கோயில் மற்றும் கச ஊரணிக்கரையில் இருந்து  ஊர்வலமாக சென்று பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து சென்று கோயில் முன் வளர்க்கப்பட்டிருந்த அக்னியில் இறங்கி வழிபாடு செய்தனர்.  பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் பொன்னமராவதி, வலையபட்டி, அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் பங்கு பெற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று இரவு பல்வேறு கலைநிகழச்சிகள் நடைபெற்றது. பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertising
Advertising

இதேபோல தேனிமலை முருகன்கோயில், பொன்னமராவதி பாலமுருகன் கோயில், வையாபுரி சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பங்குனி உத்திர விழா சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது. அறந்தாங்கி: அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த அக்னி சிறகுகள் சமூகநல அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், பொற்குடையார்கோயில் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் சுமார் 2500 பேருக்கு  மரக்கன்றுகளை வழங்கினர். மரக்கன்றுகளை அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலா பக்தர்களுக்கு வழங்கினார்.

மணமேல்குடி: மணமேல்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா காப்புக்கட்டுதலுடன்  தொடங்கி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து 10ம் நாள் காவடி  எடுப்பு திருவிழா நாளன்று சுற்று வட்டார பொதுமக்கள் தங்களது வேண்டிய வரம்  கிடைக்க வேண்டி விரதம் இருந்து மணமேல்குடி அய்யனார் கோயிலிருந்து பால்குடம்,  காவடி எடுத்து வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அறந்தாங்கியை அடுத்த மூக்குடி பொற்குடையார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பால்குடம், கரும்பு தொட்டில்,  பால்காவடி, மலர்காவடி, பன்னீர்காவடி, செடல்காவடி, பறவை  காவடி எடுத்து வந்து பொற்குடையாரை வழிபட்டனர். திருவிழா முன்னிட்டு அறந்தாங்கியில் இருந்து கோயில் வரை சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம், நீர், மோர், பழங்கள், மரக்கன்றுகள் பக்தர்களுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட்டது.

Related Stories: