×

புளியங்குடி முப்பெரும்தேவியர் கோயிலில் வருஷாபிஷேக விழா

புளியங்குடி: புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள முப்பெரும்தேவியர் பவானி ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானிஅம்மன், பால நாகக்கன்னி அம்மன்,  பாலநாகம்மன் கோயிலில் 4ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, சண்டியாகம் 2 நாட்கள் நடந்தது. சண்டியாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. 2ம் நாள் விரதமிருந்த பக்தர்கள் முப்பெரும்தேவியர் பவானி அம்மனுக்கு 350 பால்குடம், 158 தீர்த்தக்குடம், சண்டியாக ஹோம குண்டத்திற்கான  108 வகை பழங்கள், காய்கறிகள், இனிப்பு கார வகைகள் தாம்பாளங்களுடன் ஊர்வலம் நடந்தது. கோயில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் ராஜபாளையம் சாலையில் உள்ள சாலைவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பவானி அம்மன் ஆலயத்தை அடைந்தனர்.

அங்கு கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, விநாயகர் பூஜை, புண்ணியாகவஜனம், வேதபாராயணம், துர்கா மூலமந்திரம், பவானியம்மன் மூலமந்திரம், பால நாகக்கன்னியம்மன், பால நாகம்மன் மூலமந்திரம், சண்டியாகம்  பூரணாஹுதி செய்யப்பட்டு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து வருஷாபிஷேகமும், அன்னையருக்கு பாலாபிஷேகம், தீர்த்தக்குடம் அபிஷேகம், 21 வகையான அபிஷேகங்களும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் முப்பெரும் தேவியருக்கு பெரிய தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Adashashishaku Festival ,Puliyankudi Muppare Devi Temple ,
× RELATED புளியங்குடி முப்பெரும்தேவியர் கோயிலில் திருவிளக்கு பூஜை