×

திருப்பூர் அருகேயுள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா விமரிசையாக நேற்று நடந்தது. இதில் ஒரு லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக பழமை வாய்ந்த கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து 18ம் தேதி, காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூப்போடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் முன்புறம் 60 அடி குண்டம் அமைக்கப்பட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் காப்புக்கட்டு பூசாரிகள் குண்டம் இறங்கி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர், தொடர்ந்து அம்மனுக்கு மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனைகளும், கூட்டு வழிபாடுகளும் நடந்தது. பின் மாலை 4 மணியளவில் அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேர் விழா நடந்தது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் செல்வம், பெரியசாமி, தக்கார் லோகநாதன் ஆகியோர் செய்ததிருந்தனர். திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவிநாசி டி.எஸ்.பி. பரமசாமி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags : Kundukalakiyamman Temple Kundam Festival ,Tirupur ,
× RELATED வேட்பாளர் மாலை அணிவித்தபோது...