மேலமுனைஞ்சிபட்டி தோப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

நெல்லை: நாங்குநேரி அருகே மேல முனைஞ்சிப்பட்டி தோப்பூரில் உள்ள பெருமாள் சுவாமி, பத்ரகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விமான கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலஸ்தானங்களில் சமகால கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெற்றது.

Advertising
Advertising

பூஜைகளை முனைஞ்சிப்பட்டி மகாதேவ சர்மா மற்றும் சுத்தமல்லி சீதாராமன் சர்மா ஆகியோர் நடத்தினர். வருகிற மே 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொடை விழா நடக்கிறது. 3ம் தேதி இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 4ம் தேதி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை மேல முனைஞ்சிப்பட்டி தோப்பூர் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: