திருச்சுழியில் திருமேனிநாதர் திருக்கல்யாணம்

திருச்சுழி: திருச்சுழியில் திருமேனிநாதர் துணைமாலையம்மன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. திருச்சுழியில் உள்ள துணை மாலையம்மன் சமேத திருமேனிநாதர் திருக்கோவிலில் பங்குனி உற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி காலையில் சப்பரத்திலும், மாலையில் குதிரை, நந்தி, கிளி, அன்னம், பூத வாகனம் உள்பட பல வாகனங்களில், துணைமாலையம்மனும் திருமேனிநாதரும் அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Advertising
Advertising

9வது நாள் நிகழ்ச்சியாக நேற்று துணைமாலையம்மனுக்கும் திருமேனிநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று இரவு யானை மற்றும் பூப்பல்லக்கில் அலங்கார கோலத்துடன் வீதி உலா சென்றனர். இறுதி நாள் நிகழ்ச்சியாக இன்று பங்குனி உற்சவத் தேரோட்டம் நடைபெறுகிறது. இத்திருக்கல்யாணத்தில் அருப்புக்கோட்டை, தமிழ்பாடி, இலுப்பையூர், நரிக்குடி, புதுப்பட்டி உள்பட பல கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: