கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி பால்குட விழா

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி பால்குட விழா நடந்தது. நேற்று முன்தினம் 17ம் தேதி கொன்னையூர் முத்துமாரியம்மன்கோயில் பூச்சொரிதல் விழாவுடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. தொடந்து இரண்டாம் நாள் விழாவான அக்னிப் பால்குட  விழா நேற்று (18ம் தேதி) நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் முன் 14 அக்னிக் குண்டங்கள் வளர்க்கப்பட்டது. அந்த அக்னிக் குண்டத்தில் ஆலவயல், கண்டியாநத்தம், தூத்தூர் மலம்பட்டி, மூலங்குடி, ரெட்டியபட்டி, தச்சம்பட்டி, செம்பூதி, சுந்தரம், கொன்னைப்பட்டி, நல்லூர், குழிபிறை, குழிபிறைப்பட்டி, வீரனாம்பட்டி, பனையப்பட்டி, கொத்தமங்களம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து கிராம மக்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்துச் சென்று தீமிதித்து

வழிபாடு செய்தனர்.

பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், மாயழகு  தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கொன்னையூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வைரவன், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பூஜகர்கள்  செய்திருந்தனர்.

Related Stories: