கண்ணாரத்தெரு பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசிமக திருவிழா

இலுப்பூர்: இலுப்பூரில் உள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசி திருவிழா நேற்று நடந்தது. இலுப்பூர் கண்ணாரத்தெருவில் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறும். இந்த கோயிலில் மாசி திருவிழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழா துவங்கிய நாள் முதல் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அம்மன் கரகம், இலுப்பூரில் உள்ள தேரோடும் திருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து மேலப்பட்டி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்றிரவு சுவாமி வீதியுலா நடந்தது.

× RELATED சீயோன் ஆலய முப்பெரும் விழா