திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்சவ விழா துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 108 திவ்ய தேசங்களில் 44 திவ்ய தேசமாக விளங்கும் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்சவ விழா துவங்கியது. நேற்று முதல்நாள் நிகழ்ச்சியாக துவஜா ரோகணம் என்ற கொடியேற்றம் நடைபெற்றது. 4ம் திருநாள் நிகழ்ச்சியாக இரட்டை கருட சேவையும், 6ம் திருநாளாக திருக்கல்யாண உற்சவம், 9ம் திருநாளாக தேரோட்டம் நடைபெறும்,. 10 ம் நாள் நிகழ்ச்சியாக பெருமாள் சேதுக்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து மார்ச் 24ம் தேதி வரை 12 நாட்கள் உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் தேவஸ்தான செயல் அலுவலர் பழனிவேல் பாண்டியன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

× RELATED சீயோன் ஆலய முப்பெரும் விழா