ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம் : பக்தர்கள் பங்கேற்பு

ஆற்காடு: ஆற்காடு  கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆற்காடு தோப்புக்கனாவில் உள்ள கங்காதர ஈஸ்வரர் கோயிலில் நேற்று பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் நிர்வாகி  கு.சரவணன், கோயில் ஆய்வாளர்   ரா.கோவிந்தராஜ்  முன்னிலை வகித்தனர். ரத்தினகிரி பாலமுருகனடிமை  சுவாமிகள் கொடியேற்றி  பிரமோற்சவத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வரும் 24ம் தேதி வரை நடக்க இருக்கும் பிரமோற்சவ விழாவையொட்டி தினமும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தொடர்ந்து, வரும் 18ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறையினர் செய்து வருகின்றனர்.

× RELATED கலவை ஸ்ரீகாரீசநாதர் கோயிலில் பங்குனி...