×

ஆக்ஸ்ட் 16 முதல் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சிரீஸ் !!

சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸின், டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல், ஸ்ட்ரீம் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸ், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது.

முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியிருக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சீரிஸ், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான, ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.

இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார்.

நடிகர் சத்யராஜுடன் பழம்பெரும் நடிகைகள் சீதா மற்றும் ரேகா ஆகியோர் நடிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு, மெல்லிசை மன்னர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் இந்த சீரிஸில், நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

The post ஆக்ஸ்ட் 16 முதல் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’ சிரீஸ் !! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Satyraj ,Satyaraj ,Sathyaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கலைஞர் நாணயம் வெளியீடு சக்சஸ்… சக்சஸ்… சக்சஸ்…நடிகர் சத்யராஜ் வாழ்த்து