×

வேதா படத்திலிருந்து ஜான் ஆபிரகாம், தமன்னாவின் புது பாடல் ரிலீஸ்

ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து நடனமாடிய இதயத்தைத் தொடும் பாடலான ‘நீதானே நீதானே…’ என்ற பாடல் ‘வேதா’வில் இருந்து இப்போது வெளியாகியுள்ளது! ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் ‘வேதா’ படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது. ‘ஹோலியான்’ மற்றும் ‘மம்மி ஜி’ ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர்.

இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது.
பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், “‘நீதானே நீதானே…’ பாடல் ‘வேதா’ படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாது காதலும் உண்டு என்பதற்காகதான் இந்தப் பாடல்” என்றார்.

தமன்னா பாட்டியா பகிர்ந்துகொண்டதாவது, “ஜானுடன் முதல்முறையாக பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்குக் கொடுத்த அர்ப்பணிப்பு திரையில் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல் காதல் மற்றும் பல நல்ல நினைவுகள் நிறைந்ததாக இருக்கும். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நான் நம்புகிறேன்” என்றார். இது குறித்து பாடலின் இசையமைப்பாளர் அமல் மாலிக் கூறுகையில், “இந்த காதல் மெல்லிசை ‘நீதானே நீதானே…’ நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை ஊடுருவும். இது பாடல் என்பதையும் தாண்டி, நான் அனுபவித்த காதலை இந்தப் பாடலில் முழுமையாகக் கொண்டு வந்திருக்கிறேன்\” என்றார்.

‘நீதானே நீதானே…’ பாடலுக்கு அமல் மாலிக் இசையமைத்துள்ளார். குணால் வர்மா பாடல் வரிகளுக்கு அர்ஜித் சிங் பாடியுள்ளார். நிகில் அத்வானி இயக்கி இருக்க, அசீம் அரோரா எழுதிய ‘வேதா’ படத்தை ஜீ ஸ்டுடியோஸ், உமேஷ் கேஆர் பன்சால், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, ஜான் ஆபிரகாம் மற்றும் மீனாக்ஷி தாஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பான ‘வேதா’ படத்தின் முன்பதிவு தொடங்கியது. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 15 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

The post வேதா படத்திலிருந்து ஜான் ஆபிரகாம், தமன்னாவின் புது பாடல் ரிலீஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : John Abraham ,Tamanna ,Tamanna Bhatia ,Sharwari ,Abhishek Banerjee ,Zee Studios ,Emme Entertainment ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வேதா விமர்சனம்