சென்னை: புது படத்தில் அர்ஜெய் – லிங்கா இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். தெறி, சுல்தான், அண்ணாத்த, சண்டக்கோழி – 2, எமன், அன்பறிவு, தேள், போன்ற படங்களில் நடித்த அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
‘சேதுபதி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிங்கா அதன்பிறகு அதே கண்கள், ஹர ஹர மஹாதேவகி, கருப்பன், கஜினிகாந்த், சிந்துபாத், மிக மிக அவசரம், வி1, பெங்குயின், அனபெல் சேதுபதி, பரோல், டிஎஸ்பி, உடன்பால் என பல்வேறு படங்களில் நடித்திருந்தார். புதிய முயற்சியாக உருவாகும் கேங்ஸ்டர் பேன்டசி படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் கௌதம் செல்வராஜ் எழுதி, இயக்குகிறார். அஸ்வத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பிரேண்டன் ஷசாந்த். பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
The post கேங்ஸ்டர் பேன்டசி கதையில் ஒரு படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.