மும்பை: நடிகர் ரன்வீர் சிங்கை போன்று நிர்வாண போட்டோஷூட் எடுத்த நடிகை நிகிதா காக்கை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் பிரபல பத்திரிகை ஒன்றில் வெளியானது. இதனால் அவர் சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமின்றி அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தற்போது ரன்வீர் சிங்கிற்கு பிறகு பாலிவுட் நடிகை நிகிதா காக்கின் நிர்வாண புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகிதா காக் வெளியிட்டுள்ளார். அந்த படங்களில், நிகிதா தனது உடலின் பாதி பகுதியை மட்டும் மறைக்கும் வகையில் பழுப்பு நிற ட்ரெஞ்ச் கோட் அணிந்துள்ளார். உடலின் மீதமுள்ள பாதி பகுதியில் அந்தரங்க உறுப்புகளை தனது கையால் மறைத்துள்ளார்.
மூன்று புகைப்படங்களை நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை, ட்ரெஞ்ச் கோட் கொண்ட பூட்ஸ் அணிந்துள்ளார். அவது கழுத்தில் சோக்கர் அணிந்துள்ளார். அவருடைய தலைமுடியை ஹைப்போனி ஸ்டைலில் அலங்கரித்துள்ளார். முதல் இரண்டு படங்களில், தனது உடலின் முன் பக்கத்தை காட்டுகிறார். மூன்றாவது புகைப்படத்தில், தனது உடலை பக்கவாட்டில் காட்டியுள்ளார். நிகிதாவின் இந்த படங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
The post நடிகர் ரன்வீர் சிங்கை போல் நிர்வாண போட்டோஷூட் எடுத்த நடிகை: சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.