×

இந்த வாரம் என்ன விசேஷம்?

பிப்ரவரி 23, சனி  

காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம். காரமடை ஸ்ரீரங்கநாதர் சாற்றுமுறை, குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

பிப்ரவரி 24, ஞாயிறு  

காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம். சூரிய வழிபாடு சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

பிப்ரவரி 25, திங்கள்  

மாசி 13, 14, 15ம் தேதிகளில் திருக்கண்டியூரில் சூரிய பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் கோயில் பிரம்மோற்சவ ஆரம்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. காங்கேய நல்லூர் ஸ்ரீமுருகப் பெருமான் லட்ச தீபக் காட்சி.  

பிப்ரவரி 26, செவ்வாய்  

திருவெண்காடு தெப்பம். ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி வெள்ளி கற்பக ரிஷப வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ராமநாதபுரம் செட்டித் தெரு அன்னை முத்தாலம்மன் பவனி வரும் காட்சி.

பிப்ரவரி 27, புதன்  

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் இத்தலங்களில் உற்சவாரம்பம்.

பிப்ரவரி 28, வியாழன்  

கோவை ஸ்ரீகோனியம்மன் கிளி வாகனத்தில் பவனி. திருக்கோகர்ணம் சிவபெருமான் திருவீதியுலா. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.  

மார்ச் 1, வெள்ளி  

மாசி 17, 21ம் தேதிகளில் குன்றத்தூர் சேக்கிழார் சுவாமிகள் ஆலயத்தில் சூரிய பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. காளஹஸ்தி ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. காரியார் நாயனார் குரு பூஜை.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி