×

தீராத நோய் தீர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயகரை வழிபட்டால் பேரும், புகழும், செல்வ செழிப்பும் உண்டாகும். தீராத நோய்கள் தீரும், கிரக தோஷங்கள் நீங்கும். நல்ல கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கூப்பிட்ட குரலுக்கு வந்து விடுவார். மாதத்தில் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற 4வது நாள் சதுர்த்தி  சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும்.

சங்கடஹர சதுர்த்தி திதி நேரத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று முறைப்படி விநாயகரை தரிசித்து விட்டு வர வேண்டும். விநாயகர் அகவல், விநாயகர் மூல மந்திரம் தொடர்பான மந்திரங்களை கூறி தூபமிட்டு, சூடமேற்றி விநாயகரை வழிபட வேண்டும். விநாயகர் நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார். நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர். சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும்.

நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர் என்பதை புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன. சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.

Tags : Chiruthaara Chathurthi ,Thilavira ,
× RELATED சுந்தர வேடம்